நாகப்பட்டினம் – குருடாயில் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் கலப்பு!!
நாகப்பட்டினம் , நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் கடல் நீரில் கலந்த குருடாயில்.
நாகப்பட்டினத்தில் சி.பி.சி.எல் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் கடல் முழுவதும் எண்ணெய் கலந்தது.
கடலோரம் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடல் நீரில் குருடாயில் கலந்து சுற்றுச்சூழலை பாதித்தது.
சி.பி.சி.எல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்புக்காக வெளிநாடுகளிருந்தும் ,வெளிமாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது.
இப்பொழுது அந்த நிறுவனத்தின் விரிவாக்க பணி நடைபெறுவதால் அங்கு சேமிக்கப்படும்
குருடாயில் குழாய் மூலமாக கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதன் காரணமாக அங்கிருக்கும் குழந்தைகள் பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறி உள்ளனர். அங்கிருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
குழாயினை அடைக்க வந்த எண்ணெய் பாதுகாப்பு அதிகாரியிடம் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது அவரை கடலில் தள்ளி விட்டு அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்தார்.
அப் பகுதி மக்கள் அங்கிருக்கும் என்னை குழாயை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
குழாய் சரி செய்ய தீயணைப்பு வீரர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் கப்பல் மூலம் ஹெலிகாப்டர் மூலம் பாதிப்பு எவ்வளவு இருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.