தடுப்பூசி போட்ட பிறகும் தாக்கும் கொரோனா! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Photo of author

By Anand

தடுப்பூசி போட்ட பிறகும் தாக்கும் கொரோனா! பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுபடுத்த மருந்துகள் எதுவும் கண்டு பிடிக்காத சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி போட்டு கொள்வதை ஆரம்பித்துள்ளனர்.இந்தியாவிலும் இந்த தடுப்பூசி போடுவது ஆரம்பித்துள்ளது.ஆரம்பத்தில் சுகாதார துறை ஊழியர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசியை வழங்கும் பணியானது ஆரம்பித்துள்ளது.

இந்த தடுப்பூசியை போடுவதன் மூலமாக கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் என்று பொது மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.இந்நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டாலும் கொரோனா தாக்கும் என்ற அதிர்ச்சி தரும் தகவலை பிரபல நடிகையும்,அரசியல்வாதியுமான நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தனிமைபடுத்தி கொண்டுள்ளதாக நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மேலும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று நம்பியிருந்த மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.