உணவின் ருசியை கூட்டும் நெயில்.. கலப்படம் இருப்பதை அறிய உதவும் சிம்பிள் ட்ரிக்ஸ்!!

Photo of author

By Gayathri

உங்களில் பெரும்பாலானோர் நெய் பிரியர்களாக இருப்பீர்கள்.சப்பாத்தி,பருப்பு,இனிப்பு போன்ற உணவுகளில் நெய் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாகவும்,மணமாகவும் இருக்கும்.தயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வெண்ணெயை உருவாதல் நெய் கிடைக்கிறது.இந்த நெயில் நல்ல கொழுப்புகள் மற்றும் புரதங்கள் அதிகளவில் இருக்கிறது.

நெயில் உள்ள ஊட்டசத்துக்கள்:

1)வைட்டமின் ஏ
2)வைட்டமின் டி
3)வைட்டமின் ஈ
4)ஒமேகா கொழுப்பு அமிலம்
5)புரதங்கள்

மூட்டு வலி,சரும பிரச்சனைகளுக்கு நெய் தீர்வாக இருக்கிறது.உடல் பருமன்,வயிறுக்கோளாறு போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.இப்படி பல நன்மைகள் நிறைந்திருக்கும் நெய்யை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.இதனால் அதிக லாப நோக்கத்திற்காக சிலர் அதில் ஏகப்பட்ட கலப்படம் செய்கின்றனர்.கலப்படம் செய்யப்பட்ட நெய்களை உட்கொண்டால் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாக நேரிடும்.

நீங்கள் வாங்கும் நெயில் கலப்படம் இருப்பதை கண்டறிய எளிய வழிகள் இதோ.நெயில் தாவர எண்ணெய்,வனஸ்பதி,விலங்கு கொழுப்பு,மீன் கொழுப்பு போன்றவை சேர்க்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

கலப்படம் இல்லாத நெய் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.இயற்கையான பால் கொழுப்பு வாசனை அதில் வீசும்.

நெய் அடர் மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்டவை ஆகும்.அதில் செயற்கை நெய் வாசனை வீசும்.

கலப்படம் இல்லாத நெய்யாக இருந்தால் கிண்ணத்தில் ஊற்றி வெயிலில் வைத்தால் அது தெளிவாக இருக்க வேண்டும்.நெயில் துகள்கள்,தண்ணீர் துளிகள் தென்பட்டால் அது கலப்படம் செய்யப்பட்டவை ஆகும்.

கலப்படம் இல்லாத நெய் உருகி வர நேரம் எடுத்துக் கொள்ளும்.மிக விரைவாக உருகினால் அது கலப்படமான நெய் ஆகும்.விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றவும்.திரி நீண்ட நேரம் எரிந்தால் அது கலப்படம் இல்லாத நெய்.அதுவே சீக்கிரம் கருகினால் அது கலப்படம் செய்யப்பட்ட நெய் ஆகும்.