பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்!

Photo of author

By Hasini

பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் உள்ள கடைவீதியில் கடந்த 6ஆம் தேதி நான்கு இளம் பெண்களை நிர்வாணமாக்கி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ மிகவும் வைரலாக பரவிக் கொண்டுள்ளது. அந்த வீடியோவில் இளம் பருவ பெண்கள் நான்கு பேரை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி கம்புகளால் அடித்தவாறு தரதரவென்று இழுத்து ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர்.

அந்த பெண்கள் தங்களை விடுவிக்குமாறு மக்களிடம் அழுது மன்றாடி கேட்டும், யாருமே அந்த பெண்களுக்கு உதவ முன்வரவில்லை. இது பார்ப்போரை கண் கலங்க செய்தது. அந்த பெண்கள் சுமார் ஒரு மணி நேரமாக இந்த கொடூரத்தை அனுபவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவில் தொடர்புடைய நபர்கள் 5 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

பாக்கிஸ்தானிய கொள்கை ஆய்வாளரும், பத்திரிகையாளருமான ரஸா அகமது ரூபி, இந்த சம்பவத்தை மிருகத்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார். அதே போல் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஆயிஷா சிக்தா இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அரசு இறந்து விட்டதா? அல்லது நீதியை வழங்க முடியாமல் மக்களை தண்டிக்க கூட கும்பல் நீதிதான் ஒரே வழியா? எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பேசும் போது இவ்வாறு தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் அதில் அன்று நாங்கள் அந்த பாவா சாக் மார்க்கெட்டுக்கு குப்பைகளைப் சேகரிக்க சென்றோம். அப்போது மிகவும் தாகமாக இருந்ததன் காரணமாக உஸ்மான் என்ற எலக்ட்ரிக் கடைக்குள் சென்று தண்ணீர் தான் குடிக்க கேட்டோம்.

ஆனால் நாங்கள் திருட வந்தவர்கள் என நினைத்து அந்த கடையின் உரிமையாளர் சதாம் எங்களை வேறு சிலருடன் கூட்டு சேர்த்து தாக்க ஆரம்பித்தார்கள். மேலும் எங்களது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்து சாலைகளில் ஊர்வலமாக கூட்டிச் சென்றனர். ஆனால் எங்களை சுற்றி அவ்வளவு பேர் வேடிக்கை பார்த்தனர். அதில் ஒருவர் கூட எங்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.இதே போல் கடந்த வாரம் பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையை சேர்ந்த, தொழிற்சாலை அதிகாரி ஒருவர் ஒரு கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.