ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

Photo of author

By Jayachandiran

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

Jayachandiran

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இதனால் அவ்வப்போது சக கைதி மற்றும் சிறை பெண் காவலர்களிடம் நளினிக்கு சிறிய மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நேற்றிரவு துணியால் நளினி கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் கூறிய நளினியின் வழக்கறிஞர், நளினியின் தற்கொலையை சிறைக்காவலர்கள் தடுத்ததாகவும், அவர் தற்போது பாதுகாப்புடன் இருப்பதாகவும் சிறைத்துறை உயரதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார்.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக நளினி மற்றும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். இதே கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 5 பேர் மதுரை மற்றும் வெவ்வேறு சிறைகளில் அடைத்துள்ளனர். வேறு சிறைக்கு மாற்றக்கோரிய நளினியின் தற்கொலை முயற்சிக்கு விடிவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.