ஹைடெக்காக மாறிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!! பக்தர்கள் காணிக்கை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நூதன முறை!!

0
264

ஹைடெக்காக மாறிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!! பக்தர்கள் காணிக்கை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நூதன முறை!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்,பக்தர்கள் எளிய முறையில் காணிக்கை செலுத்தும் விதமாக கியூஆர் கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஆஞ்சநேயர் கோயிலில் மொத்தம் ஆறு உண்டியல்கள் உள்ளன.அதில் 2 உண்டியலில் QR கோடுகள் ஒட்டப்பட்டுள்ளது.இந்தக் க்யூ ஆர் கோடுகளை பக்தர்கள் ஸ்கேன் செய்து வங்கி பரிவர்த்தனையின் மூலம் நேரடியாக கோயில் கணக்குக்கு காணிக்கை செலுத்தும் வசதியை கோயில் நிர்வாகம் மற்றும் நாமக்கல் தனியார் வங்கியின் சேர்ந்து செய்துள்ளது.

க்யூ ஆர் கோடு மூலம் காணிக்கையை செலுத்தும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதவி ஆணையாளர் இளையராஜா அவர்கள் கூறியதவாறு: இதன் மூலம் பக்தர்கள் எளிதாக தங்களது காணிக்கைகளை செலுத்த முடியும் என்றும் வருங்காலத்தில் நரசிம்ம சாமி கோவிலிலும் கியூ ஆர் கோடு முறை கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஹைடெக் காணிக்கை செலுத்தும் முறை பக்தர்களிடையே கண்டிப்பாக வரவேற்பு பெரும் என்று அவர் கூறினார்.

Previous articleஉயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வார்த்தை கடைசி ஆசை! கல்லறையில் கதறி அழுத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்!
Next articleகாலை சிற்றுண்டி குறித்து முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்!