ஜெயலலிதாவை அன்போடு அழைக்கும் நம்பியார்!! இவர்களுக்கும் இப்படி ஒரு உறவா என வியக்கும் திரையுலகம்!!

Photo of author

By Gayathri

ஜெயலலிதாவை அன்போடு அழைக்கும் நம்பியார்!! இவர்களுக்கும் இப்படி ஒரு உறவா என வியக்கும் திரையுலகம்!!

வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக தோன்றியவர் தான் ஜெயலலிதா. இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் இவர் நடிக்கும் பொழுது நம்பியாருக்கும் இவருக்கும் இடையில் நட்பு உருவாகியுள்ளது.இவர் எம்.ஜி.ஆருடன் ஏறத்தாழ 28 படங்களிலும் நடித்துள்ளார். அப்பொழுது வில்லனாக நடித்த நம்பியார் உடன் ஏற்பட்ட நட்பு இறுதிவரை இவர்களுக்குள் இருந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜெயலலிதாவிற்கு திடீரென நம்பியார் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. உடனே கிளம்பியவருக்கு, அவருக்கு பிடித்தமான உணவுகளை தயார் செய்து வைத்து காத்திருந்தார்களாம் நம்பியாரும் அவரது மனைவியும். ஜெயலலிதாவினை உட்கார செய்து வெள்ளித்தட்டில் அவருக்கு பிடித்தமான உணவுகள் அன்போடு பரிமாறப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவிற்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனக்கு இத்துணை மரியாதை கொடுத்த நம்பியாரை ஜெயலலிதாவால் மறக்க முடியவில்லை.

ஜெயலலிதா நடிப்பில் இருந்து அரசியலுக்கு சென்று முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டார். எனினும் பழைய நினைவுகளை மறக்காமல், நம்பியார் அவர்களே அழைத்து தன்னுடைய வீட்டில் அவர் கொடுத்தது போன்று வெள்ளித் தட்டில் அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறார்.

இதனை மிகுந்த மன மகிழ்வோடு ஏற்றுக்கொண்ட நம்பியார் அவர்கள் படப்பிடிப்புத் தளங்களில், ஜெயலலிதாவை குறித்து ” அம்மு பழைய நினைவுகளை மறக்கவில்லை. அம்மு எனக்காக இதனை செய்தால் அதனை செய்தால்” என பாராட்டிக் கொண்டே இருப்பாராம். இப்படியாகத்தான் நம்பியார் அவர்கள் ஜெயலலிதாவை அம்மு என்று அழைப்பார் என்பது திரையுலகுக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.