“மச்சான் பேசுறதை நிறுத்திட்டு செயலில் காட்டினால் நல்லா இருக்கும்”- விஜய் கொள்கை குறித்து நமீதா ஓபன் டாக்!!

TVK BJP: விஜய் கட்சி கொள்கைகள் குறித்து நடிகை நமீதா தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பிறகு பல கட்சிகளிடமிருந்து ஆதரவு வந்திருந்தாலும், அதே சமயம் எதிர்மறை கருத்துக்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக விஜய் கட்சி தொடங்கிய போது முதல் ஆதரவு தெரிவித்த சீமான் தற்பொழுது அவரது கொள்கை பிடிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் பாஜக வில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள நமீதா தற்பொழுது விஜய் கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளர். ஆனால் இதற்கு முன்பு இவர்கள் இருவரும் அழகிய தமிழ்மகன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர் முதன் முதலில் மறைந்த அம்மா ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்பு ராத ரவியுடன் பாஜகவில் இனனைந்து கட்சி வேலைகளை அவ்வபோது பார்த்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் விஜய் கட்சி தொடங்கியது குறித்தும் அவரது கொள்கைகளை குறித்தும் தற்பொழுது தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக தான் உள்ளது. ஆனால் தேவயில்லாமல் பல கருத்துக்களை பேசி வருகிறார். இதனையெல்லாம் தவிர்த்துவிட்டு செயலில் காட்டினால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இவர் மட்டுமின்றி பல திரை நட்சத்திரங்கள் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தாலும் ஒரு சிலர் எதிரப்பை தான் முன்வைத்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் பிளவுவாத அரசியலென்று பாஜகவையும் குடும்ப ஊழல் என திமுகவையும் விஜய் குறிப்பிட்டு கூறியது தான். இவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அனைவரும் தற்பொழுது விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர்.