நான் முதல்வன் திட்டம்: மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தரும் தமிழக அரசு!! விண்ணப்பம் செய்வது எப்படி?

0
168
Nan Mulvan Project: Tamil Nadu Government to provide free coaching for central government competitive exams!! How to apply?

நான் முதல்வன் திட்டம்: மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தரும் தமிழக அரசு!! விண்ணப்பம் செய்வது எப்படி?

மத்திய அரசு,வங்கி மற்றும் ரயில்வே நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் எளிதில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கியது.

இத்திட்டத்தின் மூலம் தேர்வர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவளித்து பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2024-2025 ஆம் ஆண்டு இலவசப் பயிற்சி பெற விண்ணப்பம் செய்யும் நபர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர்வு மூலம் மத்திய அரசு பணிக்கு 300 பேர் மற்றும் வங்கி பணிக்கு 700 பேர் என்று மொத்தம் 1000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் தேர்வர்களுக்கு 6 மாத காலம் இலவச பயிற்சி,இலவச உணவு,தங்குமிடம் மற்றும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற 21 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் ஆவர்.இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 23 ஆகும்.

மேலும் ஜூலை 07 அன்று ஹால்டிக்கெட் வெளியாக உள்ள நிலையில் ஜூலை 14 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.இந்நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் நுழைவுத் தேர்விற்கு https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.