படப்பிடிப்பிலிருந்து தெறித்து ஓடிய அட்டகத்தி நந்திதா!! எதனால் தெரியுமா??

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழும் நந்திதா தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 

இவர் தனது சினிமா பயணத்தை கன்னட திரைப்படமான ‘நந்தா லவ்ஸ்’  என்ற படத்தின் மூலம் தொடங்கினார். அதன்பின் தமிழில் நகைச்சுவை படமான அட்டகத்தி படத்தின் மூலம் தினேஷுடன் ஜோடி சேர்ந்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானார்.

2016 ஆம் ஆண்டு திகில் நகைச்சுவை படமான ‘எக்காடிகி பொத்தாவ் சின்னவாடா’ மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

தற்போது இவர் தமிழில் நடித்து வரும் ‘ஐபிசி 376′ படத்தில் கம்பீரமான தோற்றத்துடன் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரம் என்றாலும் தண்ணீரில் குதிப்பதற்கு பயந்து படப்பிடிப்புக்கு வராமல் நந்திதா இரண்டு வாரம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து தெறித்து ஓடிய காமெடியும் பொது முகத்திற்கு முன் நடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.