“ஒரு பிரபலத்திற்கு திண்டுக்கல் பூட்டு வாங்கி வச்சிருக்கேன்” என சும்மா இருக்கிற சங்க ஊதி கெடுக்கும் நாஞ்சில் விஜயன்!! 

0
176

இந்த 2020இல்  கொரோனா ,லெபனான் வெடி விபத்து பல பிரச்சினைகள் மனிதர்கள் மனிதர்களை சந்தித்து  கொண்டிருக்கும் இந்த நிலையில் இவர்களின் குழாயடி சண்டை எப்போது முடிவுக்கு  வரும்னு தெரியல?

பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவரது மூன்றாம்  திருமணத்தின் மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

சொல்வதெல்லாம் உண்மை  லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி,  சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் என பல பிரபலங்கள் இவருக்கு எதிராக விமர்சித்தாலும் ஒத்தைக்கு ஒத்தையா மோதிக் கொண்டு அதைத்  தங்களை தாங்களே சமூக வலை தளங்களின் வாயிலாக அசிங்கப்படுத்தி கொள்கின்றனர்.

ஒரு சில நாட்களாக இவர்கள் அனைவரும் ஒருநாள் வந்த நோயாளி போல் அமைதியாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது  நாஞ்சில் விஜயன் சும்மா கிடந்த சங்கை ஊதி  எடுத்தது போல்,  தனது ட்விட்டர் பக்கத்தில் ”  புதுசா பெரிய பூட்டு வாங்கி வச்சிருக்கேன், பெரிய பிரபலத்திற்கு என்ன” என்று வனிதாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

இதற்கு பலரும் காரசாரமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

 

Previous articleஇலங்கையில் பொதுத் தேர்தல்
Next articleகொரோனா வைரஸ் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய எரிசக்தி மூலப்பொருள்:?