பிரச்சனைகள் தீர நரசிம்மர் வழிபாடு!

Photo of author

By Sakthi

நரசிம்மரை பூஜை செய்து வழிபடுவது மிகவும் சுலபமான விஷயம் எல்லோருக்கும் அவர் எளிதானவர் அவர் முற்பிறவியில் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தை போக்கி ஒரு நொடியில் அருளக் கூடியவர். யார் வேண்டுமானாலும் வழிபடலாம் நாள்தோறும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பின்னர் வெல்லத்தினால் செய்யப்பட்ட பானகம் நைவேத்தியம் செய்யவேண்டும்.

48 நாள்களாவது பூஜை செய்து வரவேண்டும் மாலை சமயத்தில் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் ஏனென்றால், அவர் நரசிங்க அவதரித்தது மாலை நேரத்தில்தான் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் லட்சுமி நரசிம்மர் மட்டுமல்லாமல் தெய்வத்தின் எந்த ஒருவரையும் தோஷ பரிகாரமாக பூஜை செய்து வரும் காலத்தில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. அதோடு குளித்துவிட்டு நியமத்துடன் தூய்மையான உள்ளத்துடனும் நம்பிக்கை மற்றும் பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

நரசிம்மரை விரதமிருந்து பிரதோஷம் அன்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். அன்றுமாலை லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து சந்தனம் மற்றும் துளசி அலங்காரம் செய்து பானகம் வைத்து வழிபட வேண்டும்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து சுவாதி நட்சத்திரத்தன்று செவ்வாய்க் கிழமைகளிலும், பிரதோஷ நாளன்று வழிபடலாம் நரசிம்மரை நாள்தோறும் தெரிவித்து தியானம் செய்துவர ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி சுகம் பெறலாம்.

திருமணத்தடை இருப்பவர்கள் பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் மிக விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.