புதுச்சேரி அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அதற்கான உத்தரவை ஆளுநர் போட வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகின்றது. சட்டசபையில் மொத்தம் இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 இதில் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் தகுதி நீக்கம், மற்றும் நமச்சிவாயம் அவருடைய தீபாய்ந்தான் போன்றவர்களின் ராஜினாமாவை அடுத்து புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு இப்பொழுது 12 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். கூட்டணி கட்சியான திமுகவிற்கு 3 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் சுயச்சை சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ வாக இருந்து வரும் ஜான்குமார் திடீரென்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியிருக்கின்றார் இதன் காரணமாக, சட்ட சபையில் ஆளும் கட்சியான காங்கிரசின் பலம் 14 ஆக குறைந்திருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் என் ஆர் காங்கிரஸ் கட்சி 7 அதிமுக 4 பாஜக 3 பேர் என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக இரண்டு தரப்பும் சமபலத்தில் இருக்கிறது. ஆகவே நாராயணசாமிக்கு இது மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல் அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை செய்து வருகின்றார். இதற்கிடையே அமைச்சர் கந்தசாமி தெரிவிக்கும்போது புதுச்சேரி அமைச்சர்கள் எல்லோரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள். ஆட்சியை கவிழ்ப்பதற்கு திட்டமிடுவதால் முடிவெடுத்திருக்கிறார்கள் ஆட்சியை நாங்களே கலைத்துவிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம் என்று தகவலை தெரிவித்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பலம் இல்லாததால் முதல் அமைச்சர் நாராயணசாமி உடனே பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஒரு நிமிடம் கூட அவர் ஆட்சியில் இருப்பதற்கு அருகதை கிடையாது. நாராயணசாமிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பது தெரியும் நம்பிக்கை உள்ள யாராக இருந்தாலும் இந்த சூழ்நிலையில் பதவியில் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.