NARUNTHAALI BENIFITS: அதிக சத்துக்கள் நிறைந்த.. நாம் அறியாத தாளிக்கீரையால் இவ்வளவு பலன்களை பெற முடியுமா?

Photo of author

By Divya

NARUNTHAALI BENIFITS: அதிக சத்துக்கள் நிறைந்த.. நாம் அறியாத தாளிக்கீரையால் இவ்வளவு பலன்களை பெற முடியுமா?

Divya

NARUNTHAALI BENEFITS: Rich in nutrients.. Can we get so many benefits from coriander that we don't know?

NARUNTHAALI BENIFITS: அதிக சத்துக்கள் நிறைந்த.. நாம் அறியாத தாளிக்கீரையால் இவ்வளவு பலன்களை பெற முடியுமா?

நம் மாநிலத்தில் பல வகை மூலிகைகள் காணப்படுகிறது.அதிலும் பெருமபாலானவை சமைத்து உண்ணும் கீரைகளாக இருக்கிறது.அதிலும் சில வகை கீரைகள் அதிக சத்துக்களை கொண்டிருக்கும்.ஆனால் நமக்கு அவை சாப்பிடக் கூடியவை என்று பலருக்கு தெரிவதில்லை.ஏதோ களைச்செடி என்று நினைத்து அதன் மகிமை தெரியமாலேயே போய்விடுகிறது.இவ்வாறு நாம் வீணாக்கி வரும் மூலிகை கீரைகளில் ஒன்று தாளிக்கீரை.

கிராமப்புறங்களில்,காடுகளில்,வேலிகளில் தானாக விளையும் இந்த மூலிகை கீரை நம் உடலுக்கு எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

நறுந்தாளி(தாளிக்கீரை) பயன்கள்:

இந்த கீரையை அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் உடலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.அது மட்டுமின்றி தோல் தொடர்பான பாதிப்புகள் நீங்கி சருமம் பளபளப்பாகும்.

குழந்தை பெற்ற பெண்கள் தாளிக்கீரை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

இந்த கீரையை அரைத்து நீர் விட்டு காய்ச்சி குடித்து வந்தால் அலர்ஜி,வாய்ப்புண்,வயிற்றுப்புண்,சிறுநீர்ப்பாதை தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள் தாளிக்கீரையை அரைத்து சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

உடல் சூடு பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் வாரம் இருமுறை தாளிக்கீரையை உணவாக எடுத்து வருவதன் மூலம் தீர்வு கிடைக்கும்.

தாளிக்கீரையில் கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி பாதிப்பு சரியாகும்.