பூமிக்குத் திரும்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் !!

Photo of author

By Parthipan K

சர்வதேச விண்வெளியான நாசா
,கடந்த மே மாதம் ஆராய்ச்சிக்காக பாப் பென்கென் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் இரண்டு பேரை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தது.
பணிகள் முடிவடைந்த நிலையில் இருவரையும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தின் மூலமாக பூமிக்கு திரும்ப தொடங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் 2 வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது

இரு விண்வெளி வீரர்களும் மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இடங்களில் ஏதோ ஒன்றில் இன்று பிற்பகல் 2.48 மணி அளவில் தரை இறங்குவார்கள் என கணிக்கப்படுகிறது. புயல் காரணமாக விண்வெளி ஓடத்தின் பயணம் தடைபடாமல் இருக்க நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இவ்விருவரும் 10 ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பி தற்போது மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.