களமிறங்கும் நடராஜன்! தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
176
Natarajan will playing in IPL
Natarajan will playing in IPL

களமிறங்கும் நடராஜன்! தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர்.நடராஜன் சேலம் சின்னப்பன்பட்டியைச் சேர்ந்தவர்.இவரின் யார்கர் பந்துவீச்சு அதிரடியாகவும் களத்தில் நிற்கும் பேட்ஸ்மேனை திணறடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.இவர கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார்.அதற்க்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார்.

இந்திய அணியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகள்,ஒருநாள் போட்டிகள்,டி20 போட்டிகள் என அனைத்து பார்மேட்களிலும் ஒரே சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற வீரர் நடராஜன் ஆவார்.2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் இவர்.அதற்கு அடுத்த ஆண்டு நடராஜன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

இவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததன் காரணமாக இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடினார்.அப்போது அவருக்கு கால் மூட்டில் அடிபட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் ஓய்வில் இருந்து வந்தார்.இதனிடையே நடராஜன் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.ஐபிஎல் போட்டிகளுக்காக தான் ஆயத்தமாவதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆகஸ்ட் 31ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்லவுள்ளது.இந்த அணியின் உயர் அதிகாரி ஒருவர் தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டிகளில் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பினால் நடராஜன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த தகவலை அறிந்த தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Previous articleஇயக்குனர் பாலா வழக்கிலிருந்து விடுவிப்பு! பத்து வருடங்களுக்குப்பின் தீர்ப்பு!
Next articleநடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன?