தேசிய விருது பெற்ற மணிரத்னம் !! வாழ்த்தாத திரை பிரபலங்கள் !!

Photo of author

By Rupa


தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மிக முக்கிய இயக்குனர் மணிரத்தினம். திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல இவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கடந்து ஆண்டு மிக பெரிய பொருட்செலவில் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்டம் இரண்டு பாகங்களாக வெளியானது.

இத்திரைப்படத்தின் கதை அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் தமிழக திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக கருதபடுகிறது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக, பொன்னியின் செல்வன் பாகம் 1, பாகம் 2 என இரண்டு பாகங்களாக வெளியானது முதல் பாகம் 2022-ம் ஆண்டும் , இரண்டாம் பாகம் 2023-ம் ஆண்டும் வெளியானது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது இத்திரைப்படம். இத்திரைபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலகமே கலந்துகொண்டது.   இதில் முதல் பாகத்திற்கு மட்டும் 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தயாரிப்பாளர், சிறந்த இசையமைப்பாளர்,  சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை கோர்ப்பாளர் என  நான்கு வகையான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 16ம் தேதி அளிக்கப்பட்டது. இதில் அனைத்து மொழிகளின் சிறந்த திரைப்படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இதில் தமிழில் சிறந்த திரைப்பட விருது பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு வழங்கப்பட்டது.

இதனை மணிரத்னம் பெற்று கொண்டார். இந்த பரிசினை மணிரத்னம் வாங்கும்போது நடிகை குஷ்பு எழுந்து நின்று கைதட்டியது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இவ்வாறு இந்த விருது பெற்ற பின்பு செய்தியாளர் ஒருவர் இந்த விருதினை யாருக்கு அர்ப்பனிக்கிரீர்கள் என்று கேட்டதற்கு யாருக்கும் இல்லை எனக்கு மட்டுமே என கூறினார்.இதனை வலைதளங்களில் அவர் விருது பெற்ற பின் இந்த விருதுக்காக யாரும் வாழ்த்த வில்லை. இதுவே தெலுங்கு திரையுலகமாக இருந்திருந்தால் அனைவரும் வாழ்த்தி இருப்பார்கள் ஆனால் தமிழ் திரையுலகில் யாரும் வாழ்த்தவில்லை என கூறியதாக மணிரத்தினத்தின் சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.