இந்நிலையில் வருடந்தோறும் ஜூலை 1 ஆம் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடும் காரணத்தை அறிந்து கொள்வோம். 1882 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பிறந்த பிதான் சந்திர ராய் என்னும் பி.சி.ராய் தனது பிறந்த நாளிலே 1962 ஆம் ஆண்டு மறைந்தார். இவர் மகாத்மா காந்திக்கு மிக நெருக்கமானவராகவும், மேற்கு வங்க முதல்வராகவும் பி.சி.ராய் பணியாற்றி வந்தார். தான் முதல்வர் பதவி வகித்த காலத்திலும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை செய்து வந்தார். இவரது சேவையை பாராட்டி மருத்துவர்களை கெளரவிக்கும் வகையில் மருத்துவர்கள் தினம் உருவாகியுள்ளது.
கடவுளுக்கு நிகராக பார்க்கப்படும் டாக்டர்களின் இன்றைய நிலை மிக மோசமானதாகவே உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் அதிக நோயாளிகள் தினசரி பெருகி வருகின்றனர். இந்நிலையில் தன்னை நோயில் இருந்து தற்காத்துக் கொண்டும், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை குணப்படுத்தும் மாபெரும் மனித சேவையில் மருத்துவர்கள் இருந்து வருகின்றனர். இது ஒரு சவாலான வாழ்க்கை முறையாக அமைந்துவிட்டது. மனித வாழ்க்கையில் ஆரோக்கியம் மேம்பட மருத்துவர்கள் மிக முக்கியமான காரணம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.