புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!

0
169

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் சூர்யா, நடிகராக மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியை  பெற்றுத்தர, இவரும் இவரது குடும்பமும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளியான புதிய கல்விக் கொள்கையை சரமாரியாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

முப்பது கோடி மாணவர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?                                  நுழைவுத்தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு என்று மக்கள் தொடர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?

1,80,000 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதில் ஒருவர் மட்டும் பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?                                                                                                        50,000 கல்லூரிகள்12,000 ஆக குறைக்கப்படும், கோச்சிங் சென்டர்  அதிகப்படுத்துவது தான் புதிய கல்வி கொள்கை யார்?

சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரே ஒரு ஆசிரியர் அமைப்பும், ஒரே ஒரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?

மூன்று வயது குழந்தைகள் எப்படி மூன்று மொழி படிக்க முடியும்?                       நாட்டில்1848 பள்ளிகள் மூடப்பட இருக்கிறதே அதற்கு பதில் என்ன?                    கல்வியில் சிறந்த நாடுகளில் எட்டாம் வகுப்பு வரை எந்த தேர்வு இல்லை என்கின்ற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சிறந்த கல்வி ஆகும்

விதவிதமான கல்வி முறைகளை வைத்துக்கொண்டு தேர்வு மட்டும் போதுவானது என்பது எப்படி சரியாகும்? எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும்  வெளிப்படையா இருக்கின்றோமே ஏன்?                                                                                                               

என்ற கேள்விகள் மூலம் தனது ஆதங்கத்தை புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வெளிப்படுத்தியுள்ளார்.

 

Previous articleபப்ளிசிட்டிக்காக சசிகலா செய்த செயல்?
Next articleகரோனாவால் பெற்ற நிவாரண நிதியைப் பயன்படுத்தி லம்போர்கினி கார் வாங்கிய நபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here