சாலையில் வேகமாக சென்ற லாரி; திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் புகுந்த அதிர்ச்சி சம்பவம்

Photo of author

By Jayachandiran

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக இருந்த வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓசூரில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் உறங்கியிருந்த 5 பேர், மற்றும் லாரி உதவியாளர் உட்பட ஆறு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்க அரசுகள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் விபத்துகளை தவிர்க்க முடிவதில்லை. இவை வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு, மது போதையில் வாகனம் ஓட்டுவது, சாலை விதிமுறை மீறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.