விடாமல் துரத்தும் நோய் தொற்று! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Sakthi

நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மற்ற நாடுகளை விடவும் இப்போது நம்முடைய நாட்டை விட மிக அதிகமாக பரவி வருகிறது என்று சொல்லப்படுகிறது ஆகவே அதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் இந்த நோய்த்தொற்று மிகத் தீவிரமாக இருக்கும் சுமார் 150 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்து இருப்பதாக தெரிய வருகிறது.

குறிப்பிட்ட அந்த 150 மாவட்டங்களில் மட்டும் தற்சமயம் 15 சதவீதத்திற்கும் அதிகமான நோய் தொற்று பரவ இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல இந்த வேகம் போகப்போக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக, இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை கொண்டு வருவதன் மூலமாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் தெரிவித்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் முன்னரே புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா, புது டெல்லி ஆகிய மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த 26 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது.இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் நாடு முழுவதும் இருக்கின்ற 150 மாவட்டங்களில் மட்டும் முழு வருடங்கள் அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்திருக்கிறது. ஆகவே இது தொடர்பாக மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்த பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கும் என்று தெரிந்திருக்கிறது.

ஆகவே நீண்ட தோற்றுப் பரவலின் வேகத்தை குறைப்பதற்காக இந்த நோய்த்தொற்று பரவல் சதவீதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மிகக் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் அவசியம் தேவை என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கின்றார். இந்த 150 மாவட்டங்களில் இந்தத் தொற்று மேலும் அதிகமாக இருக்கின்ற தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, போன்ற மாவட்டங்களும் அடங்கும். ஆகவே தேர்தல் முடிவு வெளியான பின்னர் மத்திய அரசு முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

நேற்றைய நிலவரப்படி நம்முடைய நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 புதிய நோய்த்தொற்றுகள், 3723 இழப்புகளும் ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.