இயற்கை பூச்சி விரட்டி: இதை பயன்படுத்தினால் உங்கள் தோட்டத்தில் அட்டகாசம் செய்யும் புழு பூச்சிகள் அழிந்து போகும்!!
செடிகளை வளர விடாமல், காய் பிடிக்க விடாமல் செய்யும் புழு பூச்சிகளை அகற்ற இயற்கை பூச்சி விரட்டி செய்து செடிகளுக்கு தெளியுங்கள்.
பூச்சி விரட்டி செய்ய தேவைப்படும் பொருட்கள்:
1)எருக்க இலை
2)நொச்சி இலை
3)வேப்பிலை
4)மாட்டு சாணம்
5)மாட்டு கோமியம்
6)பப்பாளி இலை
7)ஆடாதோடை இலை
8)கற்றாழை
இலை வகைகள் அனைத்தையும் 1/2 கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும். அடுத்து மாட்டு சாணம் 1 கிலோ மற்றும் மாட்டு கோமியம் 2 லிட்டர் அளவு எடுத்துக் கொள்ளவும். கற்றாழை 1/4 கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும்.
பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை:
ஒரு உரலில் வேப்பிலை, நொச்சி, ஆடாதோடை, பப்பாளி இலை, எருக்க இலை மற்றும் கற்றாழை போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.
இதை ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு மாட்டு சாணம் மற்றும் மாட்டு கோமியத்தை சேர்த்து ஒரு கம்பு கொண்டு நன்கு கலந்து விடவும். இதை நிழலில் வைத்து மூடி போட்டு ஒரு வாரத்திற்கு ஊறவிடவும்.
ஒரு வாரம் கழித்து பார்த்தால் பூச்சி விரட்டி தயாராகி விடும். 5 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி அளவு தயாரித்த பூச்சி விரட்டியை சேர்த்து செடிகளுக்கு தெளித்தால் கெட்டதை செய்யும் புழு பூச்சிகள் அனைத்தும் அழிந்து போகும்.