எருக்கன் முளைத்த வீடு விளங்காது என்று சொல்வார்கள் ஆனால் எருக்கன் செடியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? எருக்கன் செடியின் பயன்களை (Aak Leaves Benefits in Tamil) தெரிந்து கொள்ள முழுமையாக படிக்கவும்.
எருக்கன் செடி பயன்கள்: Aak Leaves Benefits in Tamil
பொதுவாக தமிழ்நாட்டில் எருக்கனில் இருவகைகள் அதிகமாக காணப்படுகிறது. ஒன்று வெள்ளை எருக்கன் மற்றொன்று சாதாரண (நீல எருக்கன்) என்று கூறுவார்கள் இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.
வெள்ளை எருக்கன் பொதுவாக பிள்ளையாருக்கு மாலையாக கோர்த்து அணிவிப்பர்.சிலர் வெள்ளை எருக்கனை மட்டும் தெய்வீக நலன் கருதி வீட்டின் தோட்டத்தில் வளர்ப்பர்.
ஊதா நிற பூக்களை கொண்ட எருக்கன் செடிகள் புதர்களிலும் பராமரிப்பு இல்லாத காடுகளிலும் ரோட்டோரங்களிலும் வளரக்கூடியவை.12 ஆண்டுகள் வரை பெரும் வறட்சியிலும் வாழக்கூடியவை.இதனால் இதற்கு பஞ்ச மூலிகை என்றும் மறைமுக பெயர் உள்ளது.
நமது தாத்தா பாட்டிகள் காலில் முள் குத்தினாலோ அல்லது நாய்,பூனை,பூரான்,தேள் போன்றவை கடித்த இடத்தில் அதன் இலையைப் பறித்து அதில் வரும் பாலை (எருக்கன் பாலை) கடித்த இடத்தில் வைப்பர்.இந்த பாலானது நல்ல விஷ முறிவாக பயன்படுத்தப்பட்டது.
இது மட்டுமன்றி ஹச்.ஐ.வி தவிர்த்து ஆண், பெண் பிறப்புறுப்பில் வரும் புண், பரு, சொறி மற்றும் சில பால்வினை நோய்களுக்கு எருக்கன் பூவை எடுத்து நன்கு வெயிலில் காய வைத்து தூளாக்கிக் கொள்ள வேண்டும்.
இதனை நாட்டு கருப்பட்டியோடு (பனை வெல்லம்)சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் பிரச்சனைகள் தீரும். இதேபோல் குழந்தைகளின் வயிறு வலி, கிறுமித்தொல்லை, பசியின்மை போக்கவும் 5 சொட்டுவரை எருக்கன் இலை சாறு கொடுக்கப்படும்.
மேலும் எருக்கன் செடி பாம்பு கடிக்கு நல்ல முதலுதவி மருந்தாக பயன்படுகிறது.பாம்பு கடித்தவர்கள் இதன் 3 இலையை எடுத்து வாயில் போட்டு மென்று விட்டு இதன் வேரை அழைத்து பாம்பின் கடிவாயில் பூசினால் விஷத்தின் வீரியம் குறையும் இதன் பின்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.