ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா!

Photo of author

By Sakthi

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா!

Sakthi

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இன்று நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது. பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமாகும் இந்த உற்சவம் மாலை 3:30 மணி வரையில் மூலஸ்தானத்தில் ரங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருள்கிறார். இன்று மாலை 6:30மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து ரங்கநாச்சியார் புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு வருகை தருகிறார்.

இந்த கொலுவானது நாளை 7:45 மணியளவில் தொடங்கி 8 :45 மணி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு சுமார் 9:45 மணியளவில் புறப்பட்டு 10 மணியளவில் மூலஸ்தானத்திற்கு வந்தடைகிறார் ரங்கநாச்சியார் அம்மன்.

2ம் திருநாள் முதல் 6ம் திருநாளான 1ம் தேதி மற்றும் 8ம் திருநாளான 3ம் தேதி மூலஸ்தானத்திலிருந்து ரங்கநாச்சியார் 5:30 மணியளவில் புறப்பட்டு 6 மணியளவில் கொலுமண்டபத்திற்கு வருகை தருகிறார். வியாழன் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாளான 2ம் தேதி வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயாரின் திருவடி சேவை நடைபெறுகிறது.

விழாவின் 9ம் நாளான 4ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவு பெறுகிறது.