தீபாவளி முன்னிட்டு தொடர் விடுமுறைகளை வழங்கிய நிறுவனம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ஊழியர்கள்!

0
186

நீங்கள் மாத சம்பளத்திற்காக ஏதாவது ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ வேலை செய்பவரா? உங்களுக்கு கேஷுவல் லீவ், மெடிக்கல் லீவ் என எத்தனையோ விதமான விடுமுறைகள் இருக்கும். ஆனால் அனைத்து விதமான விடுமுறைகளையும் நீங்கள் எப்போதாவது முழுமையாக எடுக்க முடிந்திருக்கிறதா? அப்படியிருக்க வாய்ப்பே இல்லை.

ஏனெனில் நாம் கேட்கும் அனைத்து தினங்களிலும் விடுமுறை வழங்கிக் கொண்டே இருந்தால் நிறுவனத்தின் வேலைகள் பாதிக்கப்படும். அதேநேரம் நாம் கேட்காமலேயே நமக்கு விடுமுறை கிடைக்குமென்றால் அது பொது விடுமுறை தான். அதாவது தீபாவளி, பொங்கல், ரம்ஜான் கிறிஸ்மஸ் உள்ளிட்ட தினங்களில் பொது விடுமுறை கேட்கும்

இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள தினங்களில் மட்டுமே பொது விடுமுறை எல்லோருக்கும் கிடைக்கும். மற்ற நாட்களில் விடுமுறையை எதிர்பார்க்க முடியாது.

தொடர்ச்சியாக விடுமுறை வழங்கியுள்ள மீஷோ நிறுவனம்

வழக்கமான நடைமுறைக்கு ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியான விடுமுறை வழங்கி அதிர்ச்சி வழங்கி இருக்கிறது மீஷோ நிறுவனம் அதோடு தீபாவளியை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் அனைவரும் செம குஷியில் இருக்கிறார்கள்.

வரும் அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 1ம் தேதி வரையில் இந்த நிறுவனம் தன்னுடைய ஊழியருக்கு விடுமுறை வழங்கி இருக்கிறது. இதில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களுக்கு மன ரீதியாக புத்துணர்ச்சி கிடைக்க இந்த விடுமுறை உதவும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடுமுறை என்று பெயரளவில் அறிவித்துவிட்டு சில முக்கிய பணிகளை வீட்டிலிருந்தபடியே முடிக்க வேண்டும் என்று தெரிவிக்காமல் முழுமையாக 11 நாட்கள் தன்னுடைய ஊழியர்கள் வீட்டிலிருந்து புத்துணர்ச்சி பெறலாம் என்று தெரிவித்துள்ளது மீஷோ நிறுவனம்.

Previous articleஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா!
Next articleகோலி, சூர்யகுமார் அபாரம்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – சாதனை வெற்றியோடு கோப்பையை வென்ற இந்தியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here