15 வருடத்திற்கு முன்னால் நடந்த தவறுக்கு இப்போது வருத்தப்படும் நடிகை!

Photo of author

By Sakthi

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக அறிமுகமானார். அதோடு நெப்போலியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி எழுதி இயக்கியிருந்தார், அதேபோல கே பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் சார்பாக புஷ்பா கந்தசாமி தயார் செய்திருந்தார். இசையமைப்பாளர் பரத்வாஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். அதேபோல கோலிவுட் வட்டாரத்தில் அய்யா திரைப்படத்தில் தான் முதன் முதலாக நயன்தாரா அறிமுகமாகி இருந்தார்.

அதோடு இந்தத் திரைப்படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருடம் என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த திரைப்படத்தை தவற விட்டு விட்டதாக ஒரு நடிகை தெரிவித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் மலையாள சினிமாவில் பிசியாக இருந்ததன் காரணமாக, அதனை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படம் நயன்தாராவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக மாறிப் போனது தெரியவந்ததும் இது தெரிந்திருந்தால் இதை மறுத்திருக்கவே மாட்டேன் என்று நவ்யா நாயர் தெரிவித்திருக்கிறார்.