“லேடி சூப்பர்” உள்ளிட்ட பிரபல நடிகைகளை மோச பண்ண, நில மோசடி கும்பல்!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் கனவு கன்னிகளாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளனர்.

அண்மையில் ரம்யாகிருஷ்ணன் தனது காரில் சரக்கு பாட்டிலை கடத்தி சென்ற போது மாட்டிகிட்ட  சம்பவத்தைத் தொடர்ந்து பண மோசடியில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ரம்யா கிருஷ்ணனுக்கு இப்பவரை மார்க்கெட் குறையாமல் தமிழ் தெலுங்கு சினிமாக்களில் வலம் வருகிறார். அதேபோன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் டாப் ஹீரோயின் லிஸ்டில் எப்பொழுதுமே இடம்பெற்றுள்ளார். இவர் தனது படத்திற்கு சுமார் 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்

இந்நிலையில் இருவரும் சேர்ந்து பெங்களூரில் ஒரு புறம்போக்கு நிலத்தை ஒன்றரை கோடி அளவில் பணத்தை முதலீடு செய்து வாங்கினர். இவர்களை ஒரு புரோக்கர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கோடிக்கணக்கில் விற்று விட்டு தப்பி  ஓடிவிட்டார்.

அந்த இடத்தை தற்பொழுது பெங்களூரு அரசு நீர் தேக்கும் இடம் என்று நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இதனால் கோடிக்கணக்கில் ஒருவரிடம் பணம்  ஏமாந்தது வெளியே தெரியாமல் மறைத்துவிட்டனர்

“கத்தரிக்காய் முற்றினால் தெருவுக்கு வந்துதானே ஆகணும்” என்ற பழமொழிக்கு ஏற்ப பிரபலங்கள் என்ன செய்தாலும் அதனை சமூக ஊடகம் திரையிட்டுக் காட்டி விடும் என்பது தானே உண்மை. அதே போல் தான் இந்த விஷயம் வெளிவந்துள்ளது.