ADMK BJP: அதிமுக பாஜக மீண்டும் இணைந்தாலும் இந்த கட்சி நிர்வாகிகளினாலே மனக்கசப்பு ஏற்படுவது உறுதி எனக் கூறுகின்றனர். நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி தான், ஆனால் கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது, அதிமுக பாஜக கூட்டணி அரசு என்றும் அமித்ஷா சொல்லவில்லை என கூறினார். நாங்கள் தேர்தலுக்காக தான் கூட்டணியில் உள்ளோம். இதனால் ஆட்சியில் பங்கு போட்டுக்கொள்ள மாட்டோம் என்பதை தீர்க்கமாக தெரிவித்தார்.
இவ்வாறு எடப்பாடி கூறியது பாஜகவிற்கு சற்று அதிருப்தியை உருவாக்கியது. இவரைத் தொடர்ந்து கொள்கை பரப்பு செயலாளரும், கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை தெரிவித்தார். இப்படி ஒருவர் பின் ஒருவராக எங்களுக்கு கீழ் தான் ஆட்சி எனக் கூறுவது பாஜக தலைமையில் மீண்டும் புகைச்சலை கிளப்பியுள்ளது. ஆனால் பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் ராகேந்திரனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளார். அவர் ஒட்டி போஸ்டர் தான் தற்பொழுது சர்ச்சையாகி இருக்கிறது.
அந்த போஸ்டரில் எடப்பாடிக்கு எதிராக கூறும் வகையில், வருங்கால முதல்வரே வருக வருக என்று வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலரும் சோசியல் மீடியாவில் அந்த போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் எனகூறி கேலி கிண்டலுமாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே இந்த மோதல் போக்கை சரி செய்யவில்லை என்றால் கட்டாயம் கூட்டணியானது முற்றுப்புள்ளி வைத்து முடிவுக்கு வந்துவிடும்.