தமிழக பாஜக தலைவராகப் போகும் நயினார்.. இவருக்கெல்லாம் அந்த அதிகாரமில்லை!! அண்ணாமலை வீடியோ வைரல்!!

BJP: பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ள நிலையில் அண்ணாமலைக்கு அடுத்த போஸ்ட் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என கூறி வருகின்றனர். கூட்டணி கட்சி என்று கூட பாராமல் அதிமுக குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியதால் எடப்பாடி கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதன்பின் அதிமுக சார்பாக ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிவந்தனர். அதேபோல அண்ணாமலையும், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் கட்டாயம் பதவி விலகிக் கொள்வதாக கூறினார். இப்படி இருவரும் மாறி மாறி வசைப்பாடி வந்த நிலையில், டெல்லி சென்று அமித்ஷா வை எடப்பாடி சந்தித்து வந்தார். அதன்பின் இருவரும் மீண்டும் இணைய போவதாக தகவல்கள் வெளியானது.

https://x.com/Surya_BornToWin/status/1910672830716330209?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1910672830716330209%7Ctwgr%5E5ced4b5637078dc7f8b99971640cc3f8e4fc53ef%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Ffact-check-did-annamalai-said-nainar-nagendran-has-no-authority-viral-video-is-false%2Farticleshow%2F120225883.cms

அதேபோல பாஜக மாநில தலைமைக்கு வேறு தலைவர் நியமிப்பதாகவும் கூறினர். அந்த வகையில் இந்த வாய்ப்பானது தற்போது நயினார் நாகேந்திரனுக்கு சென்றுள்ளது. தற்பொழுது அண்ணாமலை மற்றும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் முன்பு பேச வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருவருக்குண்டான கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, எடப்பாடி-யிடம் பேசினாலே போதும் ரெய்டு விட அவசியம் இருக்காது என்று கூறினார்.

இவ்வாறு அவர் கூறியது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ரெய்டு அனுப்புவதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என தெரிவித்திருந்தார். இந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.