முத்தம் மட்டும்தான் கொடுக்கல மொத்தத்தையும் காட்டியாச்சு!! நயனின் லேட்டஸ்ட் அப்டேட்!!
விஜய் டிவியின் மூலம் அறிமுகமான கவின் தற்பொழுது சினிமா துறையில் பெகுலியர் ரோலில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இவரது டாடா தற்பொழுது வெளியான ஸ்டார் உள்ளிட்ட பல படங்களை சொல்லலாம். அதேபோல நயன்தாராவும் திருமணம் குழந்தைகள் என ஆன பிறகும் ஹீரோயின் ரோலை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். குடும்பம் கரியர் என இரண்டிலும் படும் பிஸியாக உள்ளார்.
தற்பொழுது நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் படத்தின் போஸ்டரானது வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் விஷ்ணு இயக்கிய நிலையில் இதன் முதல் போஸ்டரை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இருவரும் மிகவும் நெருக்கமாக முத்தம் கொடுப்பது போல் உள்ளது. இதனை நயன் மற்றும் கவின் இருவரும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். இதன் கதை உருவமானது மூத்த பெண்ணின் மீது காதல் வயப்படுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட திரிஷா மற்றும் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை போன்று இருக்குமா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இருவரும் நெருக்கமாக உள்ள இந்த படத்தின் போஸ்டரானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேற்கொண்டு இந்த படம் எப்பொழுது வெளியாகும் என எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.