இவர் போற போக்க பாத்தா நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல?

Photo of author

By Kowsalya

நயன்தாராவுக்கும் உங்களுக்கும் எப்பொழுது கல்யாணம் நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஷ் சிவனை பார்த்து, இவர் போற போக்க பாத்தா தலைவியை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு போல என்று சொல்லி வருகிறார்கள்.

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெறும் என பலரால் கூறப்பட்டது.ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

இந்நிலையில் லாக் டவுனில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கல்யாணம் முடிந்து விட்டது என வதந்தி பரவி கொண்டே இருந்தது. பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவனிடம் எப்பொழுது திருமணம் என்று கேட்டதற்கு, விக்னேஷ் சிவன் காதல் போர் அடிக்கும் பொழுது திருமணம் செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட மக்களோ நயன்தாராவை காதலிப்பது போரடிக்கவே செய்யாது, அப்படி என்றால் கடைசி வரை திருமணம் செய்யாமல் ஒன்றாகவே இருந்து விடலாம் என நினைக்கிறீர்களா ?என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவனிடம், மீண்டும் திருமணம் குறித்த கேள்விகள் கேட்கப்படும் பொழுது, அதற்கு திருமணத்திற்கு ரொம்பச் செலவாகும் அதனால் பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன், கொரோனா போக காத்துக்கொண்டிருக்கிறேன், என்ற பதிலை விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்களும் உங்களிடம் இல்லாத பணமா? இதில் எதற்கு பணம் சேர்த்து வைக்கிறார்கள். நம்பும்படியாக ஏதாவது சொல்லுங்க! டைரக்டரே! முதலில் காதல் போரடித்தால் திருமணம் என்று சொன்னீர்கள். இப்பொழுது காசு சேர்த்து வைக்கிறேன் என்று சரி இல்லையே என்று கூறி வருகின்றனர்.

அப்போது தலைவியைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று நேரடியாகச் சொல்லி விடலாமே, எதற்கு இந்த மாதிரியான காரணங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்? கொரோனா காலத்தில் செலவில்லாமல் திருமணம் செய்யலாம். கோவிலில் வைத்து தாலி கட்டினால் முடிந்துவிட்டது. இதற்கு எதற்கு காசு சேர்த்து வைக்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காத்துவாக்குல இரண்டு காதல் அந்த படத்தை முடித்துவிட்டு சீக்கிரம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் , என்று இயக்குனருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். தங்கள் திருமணத்தில் மற்றவர்கள் மிகவும் அக்கறையோடு இருப்பதை பார்த்த விக்னேஷ் சிவனுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதாம்.