ஷாருக்கான் திரைப்படத்தில் இருந்து விலகும் நயன்தாரா?

Photo of author

By Parthipan K

ஷாருக்கான் திரைப்படத்தில் இருந்து விலகும் நயன்தாரா?

Parthipan K

தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா. நயன்தாரா உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தாலும் ஹிட் தான், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தாலும் ஹிட் தான்.

ஆரம்ப காலக்கட்டத்தில் வழக்கமான ஹீரோயின்கள் போலவே, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் மட்டுமே வந்து கொண்டிருந்த நயன்தாரா தன்னுடைய இரண்டாம் இன்னிங்சில் இருந்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்து அதில் ஹிட்டும் கொடுத்தார்.

நயன்தாராவின் இந்த முயற்சி மற்ற கதாநாயகிகளையும் இது போன்ற திரைக்களங்களை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது. நயன்தாரா இந்த வெற்றியினாலேயே தென்னிந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ஆனார்.

நயன்தாரா இயக்குனர் அட்லீயின் ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆர்யா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

அதன்பின்னர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்த அக்டோபர் 3ம் தேதி பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் முடிவடைய இருக்கும் நிலையில் ஆர்யனுக்கு இன்னும் பெயில் கிடைக்கவில்லை. இதனால் ஷாருக்கான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக நயன்தார இந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின்றன.