தன்னுடைய லவ் பிரேக்கப் குறித்து பேசிய நயன்தாரா!!

Photo of author

By Gayathri

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடைய திருமணம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று நடைபெற்றது. மிகக் கோலாக்கலமாக நடந்த திருமணத்தை திரைப்பட வடிவில் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்த திரைப்பட வடிவிலான காட்சியினை வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், அதற்கான காரணமாக தனுஷ் அவர்களே உள்ளார் என்பது அனைவரையும் யோசிக்க வைப்பதாக இருந்த நிலையில் அதற்கான உண்மை இப்போது வெளிச்சம் ஆகியுள்ளது.

இந்நிலையில் தனுஷை நடிகைகள் நயன்தாராவின் சார்பில் எதிர்த்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதற்கான காரணம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்கள் முதன் முதலில் தனுஷினுடைய தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தில் இணைந்ததன் மூலம் மலர்ந்த காதல் தான். இந்த காரணத்தையும் தன்னுடைய ஆவணப்படத்தில் இணைக்க நினைத்த இவர்களுக்கு தனுஷ் இரண்டு வருடங்களாக பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

ஆனால் தற்பொழுது தனுஷினுடைய அனுமதி இன்றி இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டதால் இவர்கள் இருவருக்கும் இடையே மிகப் பெரிய மோதலை உருவாக்கியுள்ளது. இதற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், இப்போது ஆவணப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி நயன்தாரா பேசியுள்ளார். அதில் “நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்களோடு ஏன் முறிவு ஏற்பட்டது என்று ஊடகங்கள் கேள்விக் கேட்பதில்லை. அவர்களாகவே ஒரு கதையை உருவாக்கி நம்பத் தொடங்கி விடுகிறார்கள். கடைசியில் இந்த உலகில் யாருமே காதலிக்காதது போலவும் நான் மட்டுமே காதலித்தது போலவும் பேசுகிறார்கள்” என தன்னுடைய கோபத்தை ஆதங்கமாக தெரிவித்திருக்கிறார் நடிகை நயன்தாரா அவர்கள்.