ஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்!

0
88

ஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்!

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கடந்த ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருமனத்துக்குப் பின் இவர்கள் இருவரும் இணைந்து திருப்பதிக்கு  சென்று வந்தனர். பின் சென்னையில் பிரஸ் மீட் ஒன்றை நடத்தினார்கள்.  தேன்நிலவு முடிந்து இருவரும் தங்கள் படங்களுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.

திருமணம் சம்மந்தமாக வீடியோ எதுவுமே இணையத்தில் வெளியாகவில்லை. ஏனெனில் திருமண வீடியோவை அவர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்ப பெரும்தொகைக்கு விற்றுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அதை உறுதி செய்யும் விதமாக நெட்பிளிக்ஸ் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு ‘நயந்தாரா- விக்கி நெட்பிளிக்ஸுக்கு வருகிறார்கள்’ என்று அறிவித்துள்ளது. இதனால் விரைவில் இவர்கள் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

These images of Nayanthara and Vignesh have us seeing stars 🤩✨ BRB, we’re doing a little happy dance ourselves because THEY’RE coming to Netflix🕺💃it’s beyond a fairy tale!!http://https://twitter.com/NetflixIndia/status/1550016359039631360?t=5fTAUqnIhwFAkSenZz9yHw&s=08