Nayanthara : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ! நெட்பிளிக்ஸ் வெளியிட்ட டிரைலர்
தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் எப்போது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது திருமணத்தில் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர்களது திருமணத்தில் ஒரு வித்தியாசமான முறையை செயல்படுத்தினார்.அதாவது இவர்களது திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை பிரபல OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியிருந்தது. இந்த திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்று உள்ளதாக கூறப்பட்டது.அதனால் மீடியா உள்ளிட்ட மற்றவர்கள் யாரும் திருமண நிகழ்வை படமெடுக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் எடுத்த வீடியோ எப்போ வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த வகையில் இந்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளி வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் சற்று முன் இந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ குறித்த ட்ரெய்லர் வீடியோவை நெட்பிளிக்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது.
Cue the malems cos we're ready to dance in excitement💃
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஒருவரை பற்றி இன்னொருவர் கூறிய கருத்துக்கள் அதில் உள்ளன. இதனைத்தொடர்ந்து விரைவில் நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.