வெக்கேஷன் மோடை ஆன் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி!!! டிப்ஸ் கொடுக்கும் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

தமிழ் திரையுலகில் பிரபலமாக பேசப்படும் காதல்  ஜோடிகளில் ஒரு ஜோடி தான் விக்கி நயன் ஜோடி. இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருக்கும் நேரங்களை தவிர மற்ற நாட்களில் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவர். விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா உடன் வெளிநாடுகளுக்கு சென்று சுற்றி பார்ப்பது மிகவும் பிடித்த ஒன்று.

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து நயனும் விக்கியும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்கள். இதனால் சில காலங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் ‘கோ கொரோனா கோ’ என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு நயன்தாராவுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை மிஸ் பண்ணுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் சில சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாட நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றார். நானும் விக்கியும் ஒன்றாக விமானத்திலிருந்து இறங்கி நடந்து செல்லும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் குஷி ஆனார்கள். மேலும் வழக்கம் போல மேரேஜ் எப்போ? என்ற கேள்வியையும் கேட்டார்கள்.

தற்போது கோவாவில்  காதல் ஜோடி  உள்ளதாக தகவல் வெளியாகிறது.மேலும் விக்னேஷ் சிவன், நயன்தாரா நீச்சல் குளம் அருகே நடந்துசெல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நிஜமாவே ரொம்ப நாள் கழிச்சு வெக்கேஷனுக்கு சென்றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள்  அப்படியே அங்க  ஒரு சர்ச்சை பார்த்து தலைவிய கல்யாணம் பண்ணிக்கோங்க என்று ஐடியா கொடுத்துள்ளனர்.