இன்று நயன்தாரா தமிழ் சினிமா துறைகள் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த இவர் அங்கு டிவி சேனலில் வேலை பார்த்ததோடு பல விளம்பரங்களிலும் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அய்யா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இப்படி தன்னுடைய சினிமா வாழ்வை துவங்கிய அவர் அதன் பின்பு பல படங்களில் நடித்த கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி நடிகையாக நடிக்க தொடங்கி அதன் பின் தமிழ் சினிமா துறையில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வளம் வந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து திருமணம் செய்து தற்பொழுது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், இவ்வளவு பெரிய முன்னணி நடிகையாக விளங்கக்கூடிய நடிகை நயன்தாரா அவர்களுக்கு சினிமா துறையின் முதல் அனுபவமானது அவ்வளவு நன்றாக அமையவில்லை. ஐயா திரைப்படத்தில் நடிப்பதற்காக முதல்முறையாக படப்பிடிப்பு தளத்திற்கு தன்னுடைய அம்மாவுடன் மினி பஸ்ஸில் வந்த நயன்தாரா அவர்களை பார்த்ததும் ஐயா திரைப்படத்தின் இயக்குனர் மிகவும் கோபமடைந்திருக்கிறார். காரணம் நயன்தாரா மாடர்ன் டிரஸ்ஸில் வந்து இறங்கியதே. கோபத்தில் அய்யா திரைப்படத்தின் இயக்குனரான ஹரி , ” இந்த இடத்தை விட்டு அந்த பெண்ணை கூட்டிட்டு போயிடுங்க ” இன்று மிகுந்த கோபத்துடன் தெரிவித்திருக்கிறார். அதன் பின்பு அவரை சமாதானப்படுத்தி மாலையில் வேற காஸ்டியூம் கொடுத்து பார்க்கலாம் என கூறி சமாதானப்படுத்தியதோடு அன்று மாலை பாவாடை தாவணியில் நயன்தாராவை பார்த்த பின்பு தான் சரி இவரை நடித்துவிட்டுப் போகட்டும் என இயக்குனர் ஹரி தெரிவித்திருக்கிறார்.