Cinema News: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியிட நடிகர் தனுஷ் சுமார் ரூ.10 கோடி கேட்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் இருக்க கூடாது என தயாரிப்பாளர் தனுஷ் உறுதியாக இருந்த நிலையில், தற்போது அவர் அந்த படத்தை வெளியிட ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
அந்த வெறும் 3 செகண்ட் வீடியோ என்னவென்றால் நானும் ரவுடிதான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்கி மற்றும் நயன் பேசிக் கொண்டிருக்கும் வீடியோக்கள் ஆகும். அந்த விடியோவை 24 மணி நேரத்தில் நீக்க விட்டால் ரூ.10 கோடி வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் இந்த ஆவணப்படம் வெளியிட இரண்டு ஆண்டுகள் தனுஷின் பதிலுக்காக காத்திருந்தோம் என கூறியிருந்தார்.
இந்த சர்ச்சை பேச்சு பற்றி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் நாங்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம், எங்களின் முதுகுக்கு பின் பேசுபவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை மற்றும் அதை பற்றி பேச எங்களுக்கு நேரம் இல்லை எனவும் எனக்கும் என் மகனுக்கும் வேலை தான் மிக முக்கியம் என அவர் கூறியிருந்தார்.
அது மட்டும் அல்லாமல் அந்த ஆவணப்படத்திற்கு நயன்தாரா தடையில்லா சான்றிதழ் பெற 2 ஆண்டுகள் எனது மகனுக்காக காத்திருந்தது என்று சொன்னது எல்லாம் சுத்த பொய் மற்றும் இது தொடர்பாக பேச எனக்கு விருப்பம் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.