அஜித்தை கடுப்பேத்த நயன்தாரா போட்ட மாஸ்டர் பிளான்!! தளபதி 68ன் ஹீரோயின் வாய்ப்பு?
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. 2005ல் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 18 வருடங்களாக கதாநாயகியாகவும், கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக, லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் இவரை பற்றிய சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை.
ஆனாலும் இவர் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நயன்தாரா இவரை தேடி வரும் கதைகளையே செலக்ட் செய்து தான் நடிப்பார். அப்படி இருக்கும்போது நயன்தாரா தேடிப்போய் வாய்ப்பு கேட்டுள்ளார். அதாவது தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதற்காக இந்த முயற்சி என்றால் சில மாதங்களுக்கு முன்பாக அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக பேசப்பட்டது. பிறகு அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு வழங்கப்பட்டது. அப்போது இதை பற்றி நயன்தாரா அஜித்தை சந்தித்து இந்த பிரச்சினையை பற்றி பேச நினைத்தார். ஆனால் அவர் அவரது முடிவில் உறுதியாக இருந்தது நயன்தாராவை அவமானப் படுத்தியுள்ளது.
இந்த காரணத்தினால் தான் விஜயுடன் நடிப்பது போலவும் இருக்கும், அஜித்தை பழிவாங்கிய மாதிரியும் இருக்கும் என நினைத்து பட வாய்ப்பினை கேட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே வெங்கட் பிரபு கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக முடிவு செய்துள்ளார். தற்போது நயன்தாராவும் ஹீரோயினாக முயற்சி செய்வது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.