பாஜக தலைவராகிறாரா நயினார் நாகேந்திரன் ? பரபரப்பில் கமலாலயம் !

Photo of author

By Parthipan K

பாஜக தலைவராகிறாரா  நயினார் நாகேந்திரன் ? பரபரப்பில் கமலாலயம் !

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட உள்ளார் இன்று மாலையில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் பாஜக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தமிழக தலைவர் பதவி வரை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சில மாதங்களாக தமிழக பாஜக தலைமை இல்லாமல் இயங்கி வருகிறது.  தலைவர் இல்லாமலேயே உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொண்டது.

இதையடுத்து எந்நேரமும் தலைவர் நியமிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இந்த பதவிக்கு வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் மற்றும் குப்பு ராமு ஆகியவர்களிடம் பெயரோடு நயினார் நாகேந்திரன் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் யாரை தமிழக பாஜக மாநிலத் தலைவராக யாரை நியமிக்கலாம் என அக்கட்சிக்குள் ஆலோசனை கடந்த சில மாதங்களாக  நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை முதல் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என ஒரு செய்தி உலாவிக் கொண்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை ஆளும் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் பாஜக தமிழகத்தில் ஒரு தலைவரை நியமிக்க இத்தனை மாத காலம் எடுத்துக்கொள்வது அக்கட்சி தமிழகத்தில் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.

மத்திய அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச் ராஜா போன்றோரை பின்னுக்குத் தள்ளி நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவதற்கு மற்றவர்களை தமிழகத்தில் நெகட்டிவ் இமேஜ் இல்லாத தலைவராக அவர் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது.