உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர் விபத்தில் மரணம்: தனுஷ், அனிருத் அஞ்சலி

Photo of author

By CineDesk

அமெரிக்காவை சேர்ந்த கோப் பிரயண்ட் என்ற உலகப்புகழ் பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் மரணமடைந்தது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கோப் பிரயண்ட் மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் கோப் பிரயண்ட் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் கோப் பிரயண்ட் அவர்களின் தீவிர ரசிகர்கள் என்பதால் தங்களது டுவிட்டரில் தங்கள் வருத்தத்தை தெரிவித்து உள்ளனர்

கோப் பிரயண்ட் அவர்கள் தனது 13 வயது மகளுடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கோப் பிரயண்ட் மற்றும் அவரது மகள் உள்பட 9 பேர் மரணம் அடைந்ததாகவும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். 5 முறை என்.பி.ஏ சாம்பியன் பட்டம் பெற்ற கோப் பிரயண்ட் மறைவு உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது