வருமான வரி சோதனையினர் தன் மகள்வீட்டில் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்! ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பரப்புரை!

0
165
ncome tax inspectors went to eat biryani at her daughter's house! Controversial campaign by Stalin!
ncome tax inspectors went to eat biryani at her daughter's house! Controversial campaign by Stalin!

வருமான வரி சோதனையினர் தன் மகள்வீட்டில் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்! ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பரப்புரை!

தமிழக சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அந்தவக்யில் தனது சொந்த தொகுதியில் இன்று ஸ்டாலின் பரப்புரை ஆற்றுகிறார்.

அப்போது அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தேர்தல் நெருங்கி வரும் வேலையில் வருமான வரி சோதனையினர் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.அந்தவகையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் சோதனை நடத்தினர்.பல மணி நேரம் இந்த சோதனை நடந்தது.ஆளுங்கட்சியினர் இந்த சோதனையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவரும் என எதிர்பார்த்து நின்றனர்.ஆனால் அனைவருக்கும் ஏமாற்றத்தை தரும் வகையில் அவரது வீட்டில் ஏதும் கிடைக்கவில்லை.

அவர் வீட்டில் குடும்ப செலவிற்காக ரூ.1.36  லட்சம் மட்டுமே இருந்ததாக தெரவித்தனர்.வருமான வரி சோதனையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.அதே போல செந்தில் பாலஜி வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.8000 மட்டுமே கிடைத்தது.அப்போது ஆர்.எஸ் பாரதி கூறியது,அப்பழுக்கற்றவர்களாக அரசியலில் இருந்திருக்கிறோம் மடியில் கணம் இல்லை,வழியில் பயம் இல்லை என டயலாக் பேசினார்.அதுமட்டுமின்றி ஒரு கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக பாஜக அரசு இந்த வருமான வரி சோதனையை நடத்தியுள்ளது.

வருமானவரி சோதனையை ஏற்பாடு செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் அதேபோல ஸ்டாலின் இன்று பரப்புரையின் போது கூறியது,என் மகள் வீட்டில் வருமான வரிசோதனையில் அதிகாரிகள் காலையிலிருந்து டிவி பார்த்தார்கள்,மதியம் பிரியாணி சாப்பிட்டார்கள்,டீ குடித்தார்கள்,25 சீட் அதிகமாக கிடைக்கும் என்று கூறிவிட்டு சென்றார்கள் என இவ்வாறு ஸ்டாலின் தனது பரப்புரையில் கூறினார்.

அப்போது  இவர் மகளது வீட்டில் சோதனை செய்ய சென்றவர்கள் சோதனையை நடத்தாமல் மற்ற வேலைகளை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர் என ஆளுங்கட்சி கேள்வி எழுப்பி வருகிறது.