மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டி! 100வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி சாதனை!

Photo of author

By Sakthi

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

2 அணிகளுக்குமிடையிலான 2வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்றைய தினம் நடந்தது. பூவா? தலையா? வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் மட்டை வீசிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை சேர்த்தது. விராட் கோலி, ரிஷப் பண்ட், உள்ளிட்டோர் அரைசதத்தை பூர்த்தி செய்தார்கள்..

அடுத்ததாக மட்டை வீசிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் 100வது வெற்றி என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. அந்த அணி 118 டி20 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.