அலட்சியம் காட்டும் அரசாங்கம்! கொரோனா தொற்றால் தொடர் உயிரிழப்பு!

Photo of author

By Rupa

அலட்சியம் காட்டும் அரசாங்கம்! கொரோனா தொற்றால் தொடர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது.

நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து தனது பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் முதலில் ஆரம்பித்து போலவே ஐரோப்பியாவில் கொரோனா 2 வது அலை உருவாக ஆரம்பித்துவிட்டது.அதனைத்தொடர்ந்து சென்ற வருடம் நடந்தது போலவே வெளிநாடுகளில் அதாவது (ஜெர்மனி,பிரான்ஸ்) போன்ற நாடுகளில் ஊரடங்கானது  அமல்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலானது 5 மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.அந்தவகையில் மக்களின் வாக்குகளை கவர்வதற்கு தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பிரச்சாரத்தால் தான் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவுகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அந்தவகையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டதால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.ஆனால் நம் தமிழகத்திலும் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசியல்வாதிகள் மக்களின் உயிரை துச்சமாக நினைத்து அவர்களின் சுய நலத்திற்காக மக்கள் முன் வாக்கு கேட்டு வருகின்றனர்.தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையாக 1.62 லட்சத்தை தாண்டியது.அதேபோல பாதித்தவர்களின் எண்ணிக்கையாக 1.20கோடியை தாண்டியது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேர கணக்கெடுப்பின் மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை :1,20,95,855.

புதிதாக கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:1,62,114.

புதிதாக கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை: 1,13,93,021.

இந்தியாவில் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் 94.19% ஆக உயரந்துள்ளது.உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.34% ஆக உயர்ந்துள்ளது.அதுமட்டுமின்றி இந்தியாவில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டோர் எண்ணிக்கை 6,11,13,323 ஆக உள்ளது.அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வரும் நிலையில் இந்த அரசாங்கம் எதையும் கண்டுக்கொள்ளாமல் மக்களின் உயிர்களை அலட்சியமாக நினைத்து செயல்பட்டு வருகிறது.