வெற்றிக்கு 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை… ஹேட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்த பெண் வீராங்கனை…
வெற்றி பெறுவதற்கு கடைசி 3 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி மூன்று பந்துகளிலும் ஹேட்ரிக் விக்கெட் எடுத்து அணியை பெண் வீராங்கனை வெற்றி பெறச் செய்துள்ளார்.
இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடைபெற்று வருகின்றது. இதில் பெண்கள் விளையாடும் ஹன்ட்ரட்ஸ் தெடரில் நேற்று வெல்ஸ் ஃபயர் வுமென் அணியும் பிர்மிங்கம் போனிக்ஸ் வுமென் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற பிர்மிங்கம் போனிக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெல்ஷ் ஃபயர் வுமென்ஸ் அணி 100 பந்துகளின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பிர்மிங்கம் போனிக்ஸ் அணி 100 பந்துகளுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
பிர்மிங்கம் போனிக்ஸ் வுமென் அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஐந்து பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து ஆட்டத்தின் 96வது பந்தில் ஒரு ரன் எடுத்து பின்னர் 97வது பந்தில் பவுண்டரி அடித்து 4 ரன்கள் எடுக்கப்பட்டது.
அதன் பின்னர் பிர்மிங்கம் போனிக்ஸ் வுமென் அணி வெற்றி பெறுவதற்கு கடைசி மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து இறுதியாக பந்துவீசிய வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் அவர்கள் அந்த கடைசி மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துக் கொடுத்து தோல்வியின் விளிம்பில் தவித்த வெல்ஸ் ஃபயர் வுமென் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இதையடுத்து சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவிய வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் அவர்களுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.