நம் நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் கரப்பான் பூச்சி தொல்லை பிரச்சனையை எதிர் கொண்டு வருகின்றன.குறிப்பாக மழைக்காலங்களில் எல்லா இடங்களிலும் கரப்பான் பூச்சி நடமாட்டத்தை காணமுடியும்.
வீட்டின் கழிவறை,சமையலறை உள்ளிட்ட இடங்களில் நடமாடும் கரப்பான் பூச்சிகளால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.எனவே கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை பயன்படுத்துங்கள்.
தீர்வு 01:
1)பேக்கிங் சோடா
2)வெங்காயம்
ஒரு பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதன் பின்னர் சிறிது பேக்கிங் சோடாவை அதில் மிக்ஸ் செய்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.இப்படி செய்தால் அதன் நடமாட்டம் குறையும்.
தீர்வு 02:
1)ஆரஞ்சு பழத் தோல்
ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விட்டால் அதன் தொல்லை நீங்கும்.
தீர்வு 03:
1)எலுமிச்சை தோல்
2)போரிக் அமிலம்
ஒரு எலுமிச்சம் பழ தோலை வற்றல் பதத்திற்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தட்டில் சிறிது போரிக் அமிலம் சேர்க்கவும்.அடுத்து எலுமிச்சை தோல் பொடியை போட்டு கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விட்டால் அதன் தொல்லை நீங்கும்.
தீர்வு 04:
1)சோப்
2)தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நீங்கள் உபயோகிக்கும் சோப் சிறிதளவு சேர்த்து கலக்கவும்.இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டின் மூலை முடுக்கில் தெளித்தால் கரப்பான் பூச்சி நடமாட்டம் கட்டுப்படும்.