நீட் தேர்வு நடத்தப்படும் தேதி! இன்று முதல் விண்ணப்பம் துவக்கம்!

0
114

நீட் என்ற மருத்துவ நுழைவு தேர்வு நடத்தப்படக் கூடாது என்று இந்தியா முழுவதும் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தற்போதும் கூட அதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.இந்த நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலமாக தமிழக கிராமப்புற மாணவ, மாணவிகள் பலர் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பினை தொடர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

இருந்தாலும் இவ்வளவு நெருக்கடியான ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு இந்த நீட் தேர்வை ரத்து செய்ய தயாராக இல்லை. ஆகவே இந்த நீட் தேர்விற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த சூழ்நிலையில், இதற்கு முன்னரே நாடு முழுவதும் 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு வந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக, இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கின்றார். நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மத்திய அரசு மருத்துவப் படிப்பில் இணைய விரும்பும் மாணவர்களுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் இதற்கு பல விதமான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் கூட இந்த நீட் தேர்வை ரத்து ரத்து செய்வதற்கு மத்திய அரசு தயாராக இல்லை அதே வேளையில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கின்றார்.