டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் கடந்த போட்டியில் முதல் சுற்றிலேயே 88 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை ஏறிந்ததால், நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவராவார்.
நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா, ஜெர்மணி, செக் குடியரசு, பாகிஸ்தான் வீரர் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா முதலில் ஈட்டி எறிந்த போது 87.03 மீட்டர் தொலைவு சென்றது. அதன் பின்னர் வந்த யாரும் 87 மீட்டரைத் தொடவில்லை.
இரண்டாம் சுற்றில், 87.58 மீட்டர் தொலைவுக்கு வீசினார். அதையும் யாரும் தொடவில்லை. அதிகபட்சமாக செக் குடியரசு வீரர்கள் 86.67 மீட்டரும், 85.44 மீட்டரும் வீசி இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். ஆறு சுற்றுகள் வரை நடைபெற்ற போட்டியில் வெறெந்த வீரர்களும் நீரஜ் சோப்ராவின் இலக்கை எட்டவில்லை.
இதனால், அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். அடுத்த இடங்களைப் பிடித்த செக் குடியரசு வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசியக் கீதம் இசைத்த போது, நாட்டுக்காக தங்கம் வென்ற பெருமிதத்துடன் நீரஜ் சோப்ரா மரியாதை செலுத்தினார்.
இவரது சாதனை எளிய இலக்காக கருத முதியாது. ஏனென்றால், ஒலிம்பிக் போட்டியில் நூறாண்டுக்குப் பிறகு தடகளப் போட்டியில் தங்கம் வென்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். இந்த சாதனையை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களில் கடைசி இந்தியராக தங்கம் வென்றது நாட்டு மக்களை குதூகளத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து மழைகளை பொழிந்து தள்ளினர்.
நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான அரியானா மாநிலம் பானிபட்டில் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ராணுவ வீரர்கள், உட்பட அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வென்ற சாதனையை பாராட்டி, டிவிட்டர், பேஸ்புக் பக்கங்களை நீரஜ் சோப்ரா புகைப்படத்தால் நிரப்பியுள்ளனர்.
இந்தியாவுக்கு தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு News4tamil.com சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.