சென்ற சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு நீர் என்ற தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை தாண்டி இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள்தான் மருத்துவ படிப்பிற்கு நுழைய முடியும் என்ற ஒரு நிலை இருந்தது இப்போதும் அதே நிலைதான் தொடர்ந்து வருகிறது.இந்த தேர்வில் முழுக்க, முழுக்க சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால் அரசு பள்ளியில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் இந்த தேர்வு எழுதும்போது பலர் தேர்ச்சி பெறாமல் போய் விடுகிறார்கள். இதனால் பல மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள், இதுவரையில் இந்த தேர்வில் பங்கேற்ற பல மாணவர்கள் பயம் காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த தேர்வு காரணமாக 14 மாணவ மாணவிகள் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
ஆகவே இதனை கடுமையாக எதிர்த்த திமுக சென்ற அதிமுக ஆட்சிக் காலத்திலேயே இதற்கு எதிராக பல கட்ட போராட்டங்களை திமுக முன்னெடுத்தது அதோடு இது தொடர்பாக திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இதனைத் தொடர்ந்து சென்ற வாரம் தமிழக சட்ட சபை தனில் நீட்தேர்விற்கு எதிராக சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது, அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தாலும் பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட முன்வடிவு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் இருக்கின்ற அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல் முறையாக முதுகலை மருத்துவப் படிப்புக்கான சிமுலேஷன் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வை அனுமதித்தால் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும் என நீதிபதி ராஜன் குழு தெரிவித்துள்ளது என கூறியிருக்கிறார்.
ஆகவே சட்டசபையில் நீட்தேர்வு பேருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது ஆளுநரும் இந்த மசோதாவிற்கு மிக விரைவாக ஒப்புதல் அளிப்பார் என்று நம்பிக்கை உள்ளது. இந்த ஒப்புதலுக்கு பின்னரே அவர் மூலமாக நீட் விலக்கு சட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கு உண்டாகும் பாதிப்புகளை குடியரசுத்தலைவர் உணர்ந்துகொண்டால் அவரும் இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என்று நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார் சுப்பிரமணியன்.
வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்கும்போது தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு பெற வேண்டும் என்ற தீர்மானம் சட்ட ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என கூறியிருக்கிறார்.