NEET EXAM 2024: 720/720 மதிப்பெண் பெற்று நான்கு தமிழக மாணவர்கள் சாதனை!!
நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.இதில் 23,30,225 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் பலகட்ட சோதனைகளுக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் (ஜூன் 04) அன்று நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.இதில் 13,14,160 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.தமிழகத்தை பொறுத்தவரை 1,52,920 பேர் தேர்வெழுதிய நிலையில் 89,426 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மேலும் நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ராஜனீஷ்,ஜெயந்திபூர்வஜா,ரோகித், , சபரீசன் ஆகிய 4 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசைத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு 1,44,516 பேர் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய நிலையில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்தனர்.இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் 4% பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.